மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே இலட்சியம்!

Report Print Ashik in கல்வி
546Shares
546Shares
lankasrimarket.com

சிறந்த மருத்துவராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி எஸ்.மேரி நிதுசா சோசை தெரிவித்தார்.

குறித்த மாணவி மேலும் தெரிவிக்கையில்,

உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளேன்.

நான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.

சிறந்த மருத்துவராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என குறித்த மாணவி தெரிவித்தார்.

இவர் சீலன் சோசை ஆனந்தி குருஸ் தம்பதிகளின் புதல்வி என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்