பல்கலைக்கழக பாடநெறியில் புதிய அறிமுகம் கொண்டுவர வாய்ப்பு!

Report Print S.P. Thas S.P. Thas in கல்வி
0Shares
0Shares
lankasri.com

நாட்டின் தொழில் துறைக்கு அமைய பல்கலைக்கழக பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தொழில் கேள்வி தொடர்பான கணக்கெடுப்பில் தனியார்துறையில் மட்டும் சுமார் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகை மதிப்பு புள்ளி விபர திணைக்களம் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய நாடு தழுவிய ரீதியிலான கணக்கெடுப்பில் இந்த விபரங்கள் பதிவாகியுள்ளன.

இக் கணக்கெடுப்பின் போது 3500 தனியார் நிறுவனங்களிடம் இருந்து தகவல் திரட்டப்பட்டதாகவும் அதில் 497302 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தனியார் துறையில் சகல தரங்களிலும் கிட்டத்தட்ட 50 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றுவதுடன் பல்வேறு துறைகளில் 5 இலட்சம் வெற்றிடங்கள் நிலவுகின்றன என்கின்றன அந்தப் புள்ளிவிபரம்.

அதிகளவிலான வெற்றிடங்கள் தையலுடன் தொடர்பான துறையிலும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் துறையிலும் காணப்படுகின்றது.

இவற்றை தவிர இயந்திர பொறியியலாளர், கணக்கியல், தொழில்நுட்பவியலாளர் தொடர்பான உயர் தொழில் துறைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடத்தட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டின் தொழில் துறைக்கு அமைய பல்கலைக்கழக பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு வேலைவாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கல்வி முறையின் அடிப்படையில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு சிறந்த பெறுபேற்றினைப் பெற்றாலும் அவர்கள் தங்களுக்கான திறன்களை வளர்த்துக் கொள்வதில் பின் நிற்கிறார்கள்.

குறிப்பாக, வேலை வாய்ப்புக்கு ஏற்ற முறையிலான கல்வித்திட்டங்கள் இல்லாமையினாலேயே நமது மாணவர்க்ள இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே, வேலை வாய்ப்புக்கு ஏற்ற முறையிலான கல்வியமைப்பும் கொண்டுவரப்படவேண்டியது இன்றைய தொழில்நுட்பப் புரட்சியில் இன்றியமையாத காரணியாக மாறியுள்ளது என்கிறார்கள் கல்வியியலாளர்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்