கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும்! நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய தகவல்

Report Print Kamel Kamel in கல்வி
536Shares
536Shares
lankasrimarket.com

நாளைய தினம் மாணவ, மாணவியர் கட்டாயமாக பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என தேசிய கல்வி சேவையாளர் சங்கத்தின் தலைவரும், பிரதி அமைச்சருமான அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாளைய தினம் பாடசாலைகள் மூடப்படாது, பாடசாலைகளை மூடுவதற்கு அனுமதிக்கப்படாது. நாட்டின் மாணவ, மாணவியர் நாளைய தினம் பாடசாலைக்கு வருவார்கள்.

ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்டவர்களும் பாடசாலைக்கு வருவார்கள். மாணவ, மாணவியர் கட்டாயமாக பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக கூறி பொருத்தமற்றவர்கள் ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி நாளை பாரியளவில் போராட்டம் ஒன்றை நடாத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்