அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரியாக திகழும் கண்பார்வையற்ற மாணவன்!

Report Print Vethu Vethu in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

முயற்சிகள் எதுவும் செய்யாமல் தோற்றும் போனவர்களுக்கு முன்னோடியாக மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார்.

இரு கண்களிலும் பார்வையற்ற நிலையிலும் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பலருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

காலி, கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த இசுரு மஹேஷ் பன்டித என்ற மாணவனே இவ்வாறு சாதித்துள்ளார்.

பிறப்பிலேயே இரண்டு கண்களும் தெரியாத போதிலும் குறித்த மாணவர் அண்மையில் வெளியாகிய உயர் தர பரீட்சையில் 4 பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

கபொத உயர்தரத்தில் கலைபிரிவை தெரிவு செய்து பரீட்சையில் தோன்றிய மாணவன், நாடாளாவிய ரீதியில் 85வது இடத்தையும் காலி மாவட்டத்தில் மட்டத்தில் 18 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் உயர்தரம் கற்ற இசுரு பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தும் ஒருவராகும்.

இந்த மாணவன் கபொத சாதாரண தரத்தில 8ஏ சித்திகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments