இலங்கை மாணவர்கள் இருவருக்கு பிரான்ஸ் நாட்டில் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
நிலையான நீரியல் வள ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கை மற்றும் பிரான்ஸ் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாகவே குறித்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் குறித்த புலமைப்பரிசிலை வழங்கிவைத்துள்ளார்.
தேசிய நீர்பபாசன திணைக்களத்தின் மேல் மத்திய பிராந்தியத்தின் பணிப்பாளர் நிஷாந்த சுரன்ஜித் என்பவருக்கும், இணைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் டிஷ்னா பன்னில என்போருக்குமே குறித்த அதிஷ்டம் கிடைத்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட இருவரும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா நாடுகளிலும் தமது ஆய்வுகளை மெற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.