ஒரே தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

Report Print Kamel Kamel in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

ஒரே தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளது.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடமையாற்றி வரும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த ஆசிரியர்கள் நிச்சயம் இடமாற்றம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments