20 பிரபல பாடசாலைகளுக்கு இம்மாத இறுதியில் சிக்கல்

Report Print Ajith Ajith in கல்வி
0Shares
0Shares
Cineulagam.com

பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை இந்த மாதத்திற்குள் பூர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 20 பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை இம் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பிரபல பாடசாலைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இவ்விடயம் குறித்து பல்வேறு முறைப்பாடுகளை கல்வியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை முதலாமாண்டுக்கு இணைத்துக் கொள்ளும் போது, பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் இந்த முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும குறிப்பிட்டார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments