யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக 3வது தடவையாகவும் தெரிவான வேல்நம்பி

Report Print Thamilin Tholan in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் பீடாதிபதிக்கான தேர்தலில் மீண்டும் பேராசிரியர் தி.வேல்நம்பி வெற்றிபெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த -2011 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வரும் பேராசிரியர் தி.வேல்நம்பி மூன்றாண்டுகளைக் கொண்ட பீடாதிபதி பதவிக் காலத்தில் மூன்றாவது தடவை பதவிக் காலத்தை நாளை செவ்வாய்க்கிழமை(15) முதல் ஆரம்பிக்கவுள்ளார்.

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1996 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.

பின்னர் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர், கணக்கியல், முகாமைத்துவம், தமிழியல் சார்ந்ததுறைகளில் பல்பரிமாண ஆளுமை மிக்கவராக விளங்குகின்றார்.

இவர் சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த கல்விசார் ஆய்வாளர் முதலிய விருதுகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இவர் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்