நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பம்

Report Print Thirumal Thirumal in கல்வி
83Shares
83Shares
lankasrimarket.com

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 3,014 மத்திய நிலையங்களில் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்காக மூன்று லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி இருபத்தி எட்டு மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை ஆரம்பிக்கும் காலை ஒன்பது மணிமுதல் பரீட்சையின் இரண்டாம் வினாத்தாளுக்கான நேரம் முடிவடையும் வரை பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் பரீட்சை மண்டபம் அமைந்திருக்கும் பகுதிகளில் உட்பிரவேசிக்கவோ, நடமாடவோ அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றிருந்தனர். இதேவேளை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் உட்பட ஏனைய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்காக பரீட்சை நேரத்திற்கு முன்னதாகவே பாடசாலைக்கு சென்றிருந்தனர்.

இதேவேளை வவுனியா தெற்கில் புலமை பரிசில் பரீட்சைக்கு 3014 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை சிறப்பாக நடைபெற்றுள்ளது.


மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்