கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட குழப்பம்

Report Print Kari in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

கிழக்கு பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும், காவலாளிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாணவர்களையும் வெளியேறுவதற்கான அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வரைக்கும் வெளியேறாமல் பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும், காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் காரணமாக தற்போது முறுகல் நிலை ஏற்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வளாகத்தில் தரித்து நிற்கும் மாணவர்களில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியை பல்கலைக்கழக வளாகத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே மாணவர்களுக்கும், காவலாளிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்