ஆங்கிலம் அறிவோம்: இந்த ஆங்கில வார்த்தைகளை நீங்கள் சரியாக உச்சரிக்கறீர்களா?

Report Print Peterson Peterson in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

ஆங்கில மொழி உலகம் முழுவதிலும் பரவலாக பேசப்பட்டாலும், இன்றளவும் பல ஆங்கில வார்த்தைகளை தவறாகவே உச்சரித்து வருகின்றனர்.

இவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

’Salmon' என்ற இஸ்லாமிய பெயரை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இதை, தமிழில் ‘சல்மான்’ என குறிப்பிடுகிறோம். ஆனா, இது முற்றிலும் தவறு.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் ‘Vowels' எனப்படும் ‘a,e,i,o,u'' என்ற எழுத்துக்களுக்கு அடுத்து ‘l' வந்தால் அதை உச்சரிக்க கூடாது.

உதாரணத்திற்கு, ‘could, would, talk, walk, yolk, almond...இப்படி சொல்லலாம். இந்த வார்த்தைகளில் இருக்கின்ற 'l' என்ற எழுத்தை உச்சரிக்க கூடாது. எனினும், salt, bold, gold, always உள்ளிட்ட சில வார்த்தைகள் விதிவிலக்காகும். ஆக, 'Sa(l)mon' என்ற பெயரை ஆங்கிலத்தில் ‘சமன்’ என்று தான் உச்சரிக்க வேண்டும்.

இதே போல் மேலும் சில வார்த்தைகளை உச்சரிக்கும்போது தவறுகளை செய்கிறோம்.

ஒரு ஆங்கில வார்த்தையின் கடைசியில் ‘lly' என முடிந்தால் இதற்கு முன்னால் இருக்கும் ‘a' என்ற எழுத்தை உச்சரிக்க கூடாது.

உதாரணத்திற்கு, romantically, musically, logically, dramatically...இதுபோன்ற வார்த்தைகளில் 'a' என்ற எழுத்தை உச்சரிக்க கூடாது.

ரொமேண்டிக்கலி - தவறு
ரொமேண்டிக்லி - சரி

அதே போல், ‘m' என்ற வார்த்தைக்கு அடுத்து ‘b' வந்தால் அதனை உச்சரிக்க கூடாது.

உதாரணத்திற்கு, climb, lamb, thumb, dumb....இதில் ‘b' எழுத்தை உச்சரிக்க கூடாது.

கிளைம்ப் - தவறு
கிளைம் - சரி

லேம்ப் - தவறு
லேம் - சரி

மேலும், 's' என்ற வார்த்தைக்கு அடுத்து ‘c' என்ற எழுத்து வந்தால் அதை உச்சரிக்க கூடாது.

உதாரணத்திற்கு, muscle, scissors, fascinate, scene, scenario....இதில் ‘c' வார்த்தையை உச்சரிக்க கூடாது.

முக்கியமாக, 'wednesday' என்ற வார்த்தையை பலரும் தவறாகவே உச்சரிக்கிறார்கள்.

பெரும்பாலும் ‘n' என்ற எழுத்துக்கு முன்னால் அல்லது பின்னால் ‘d' என்ற எழுத்து வந்தால் அந்த ‘d' எழுத்தை உச்சரிக்க கூடாது.

உதாரணத்திற்கு, ‘wednesday, handsome, sandwich...’

வெட்னெஸ்டே - தவறு
வென்ஸ்டே - சரி

ஹேண்ட்சம் - தவறு
ஹேன்சம் - சரி

சேண்ட்விச் - தவறு
சேன்விச் - சரி

ஆங்கில எழுத்தான ‘i' எல்லா இடங்களிலும் உச்சரிக்கப்படும். ஒரே ஒரு வார்த்தையை தவிர...

Business என்ற ஒரு வார்த்தையில் மட்டும் ‘i' எழுத்தை உச்சரிக்க கூடாது.

பிஸினெஸ் - தவறு
பிஸ்னெஸ் - சரி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்