உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின் ஆங்கில பாடநெறி பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

Report Print Gokulan Gokulan in கல்வி
0Shares
0Shares
lankasri.com

உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின் ஆங்கில பாடநெறிக்கான பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு இலங்கை உயர் தொழில் நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஹஜ் பெருநாள் தினத்தன்று நடத்தபட இருந்த குறித்த பரீட்சை செம்டெம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி டி.சில்வா கூறியுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு குறித்த தினத்தில் பரீட்சை நடத்துவதால் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எடுத்துரைத்த நிலையில் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்