களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு

Report Print Jeslin Jeslin in கல்வி
0Shares
0Shares
Seylon Bank Promotion

களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த பீடங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மாணவர்கள் 15ஆம் திகதி பிற்பகல் வேளை அளவில், தமது விடுதிகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வார இறுதியில் இடம்பெறும் ஏனைய மேலதிக விரிவுரைகளும் வழமைபோல இடம்பெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளர்.

பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்படிருந்தன.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்