பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Report Print Dias Dias in கல்வி
148Shares
148Shares
lankasrimarket.com

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒருநாள் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பத்தரமுல்ல சுகுறுபாயவில் அமைந்துள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.

இந்த விசேட சேவையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மாத்திரம் தமது அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் சமூகமளிக்கத் தேவையில்லை .

அத்தோடு அவர்களின் பொறுப்பாளர்களான பெற்றோர் விண்ணப்பதாரரின் தகவலை கிராம உத்தியோகத்தரின் மூலம் உறுதிசெய்து வழங்கப்படும் அதிகாரக்கடிதத்தை திணைக்களத்திற்கு கொண்டுவருதல் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் தபாலில் சேர்க்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்