வடக்கில் சாதனை படைத்த தமிழ் மாணவச் செல்வங்களுக்கு கிடைத்த கௌரவிப்பு

Report Print Sumi in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 35 மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுகள் வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் இம்முறை யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடமாகாணத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவர் உட்பட பல மாணவர்கள் மற்றும் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்