புதிய உலக சாதனை படைத்த கொழும்பு மாணவர்கள்

Report Print Shalini in கல்வி
34Shares
34Shares
lankasrimarket.com

கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கின்னஸ் சாதனை சான்றிதழை கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இணைந்து ரோயல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.

ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் தண்ணீர் ராக்கெட் (water rockets) ஐ வெற்றிகரமாக செலுத்தி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஒரே நேரத்தில் 1056 தண்ணீர் ராக்கெட்டுக்களை செலுத்தி படைத்த சாதனையை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

இவர்கள் 1950 தண்ணீர் ராக்கெட்டுக்களை செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.

இந்த தண்ணீர் ராக்கெட்டுக்கு தண்ணீரே எரிபொருளாகும். உரிய சாதனத்தில் பொருத்தப்பட்ட தண்ணீர் ராக்கெட்டுகளை, காற்றில் ஏவி விட்டு, அது கடக்கும் தூரத்தை கணக்கிட்டுவதே தண்ணீர் ராக்கெட் ஆகும்.

பிளாஸ்டிக் போத்தலை ராக்கெட்டாக பாவித்து தண்ணீரை எரிபொருளாக வைத்து அதை நீண்ட தூரம் செலுத்த வேண்டும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்