நீட் தேர்வு எழுத கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு

Report Print Kabilan in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது, நீட் தேர்வு எழுத 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது விதியாகும்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுத இந்திய மருத்துவ கவுன்சில் வயது வரம்பை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என அறிவித்துள்ளது.

இதேபோல், இடஒதுக்கீடு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலினின் அறிவிப்பை உறுதி செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்