இளையராஜாவுக்கு எதிராக வழக்கு? எஸ்.பி.பி மகன் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

இளையராஜவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என எஸ்.பி பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி பாலசுபரமணியன் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் மகன் எஸ்.பி.பி சரண் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இளையராஜா தன் பாடல்களை எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இது குறித்து எஸ்.பி.பியின் மகனும் பிரபல பாடகருமான எஸ்.பி.பி. சரண் கூறுகையில், இளையராஜா இசையில் என் தந்தை 2 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

அவர் இல்லாமல் வேறு இசையமைப்பாளர்கள் இசையில் என் தந்தை 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

அந்த பாடல்களே இசை நிகழ்ச்சிக்கு போதுமானது. மேலும், இளையராஜாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என என் தந்தை கூறிவிட்டார், அதனால் அமைதியாக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments