இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதலுக்கு காரணம் இது தான்? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்த இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சியில் பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்கா இசை நிகழ்ச்சியில் பட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளையராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இளையராஜா கொடுக்க மறுத்ததால் அமெரிக்க இசை நிகழ்ச்சியை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் தான், அமெரிக்காவில் எஸ்.பி.பால்சுப்பிரமணியம் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் பாடல்களை பாடக்கூடாது என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments