எஸ்.பி.பி- இளையராஜா விவகாரம்: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் இதுதான்!

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசைத்துறையில் 50 ஆண்டு நிறைவை ஒட்டி உலகின் முக்கிய நகரங்களில் இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார் எஸ்பிபி.

இந்த நிலையில் அமெரிக்காவின் சில பகுதிகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் இளையராஜாவின் பாடல்களை பாட அவர் முடிவு செய்துள்ள நிலையில், காப்புரிமை கட்டணம் செலுத்த வலியுறுத்தி இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது.

பூதாகரமாக வெடித்த இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரம் தொடர்பில் யோசித்தே பதிலளிக்க முடியும் என்றும், பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் பேசுவதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இளையராஜா விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் சாதகமாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் ரஹ்மானின் பிடிதராத இந்த பதில், இளையராஜா விவகாரத்தில் ரஹ்மான் அவருக்கு சாதகமாகவே இருப்பதாக ஆர்வலர்களால் நோக்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments