நடிகை கஸ்தூரி- ரஜினி சந்திப்புக்கு பின்னால் பாஜகவா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com
advertisement

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி, திடீரென பல்டி அடித்ததற்கு காரணம் பாஜகவா என்ற என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் பரபரப்பாக பேசப்பட்ட கஸ்தூரி, கொஞ்ச நாளில் சின்னத்திரைக்கு சென்று, பல ஆண்டுகளாக வெளியில் தெரியாமலே இருந்து வந்தார்.

advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக டுவிட்டரில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார் அவர்.

அண்மையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, அவர் டுவிட்டரில் தெரிவித்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசியலுக்கு, வருவதா?, கூடாதா? என்று வருடக்கணக்கில் யோசிக்கும் ரஜினி, எதிர்பாராத சூழ்நிலையில் எப்படி திடீரென முடிவெடுப்பார் என்று அவர் பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.

ஆனால், கடந்த 15 ம் திகதி தமது பிறந்தநாளையொட்டி, அவர் ரஜினியை சந்தித்து பேசி, சிறந்த பிறந்த நாள் ஆச்சரியம்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நேருக்கு நேர் சந்திப்பு. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

அவரது அரசியல் பார்வைகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன். அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன் என்று அப்படியே பல்டி அடித்துள்ளார் கஸ்தூரி.

இது ஒரு புறம் இருக்க, மாட்டுக்கறி திருவிழா நடத்திய ஐஐடி மாணவர்களை கடுமையாக எதிர்த்த கஸ்தூரி, அண்மையில் திமுகவினர் சட்ட சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததையும் விமர்சித்து இருந்தார்.

இதை எல்லாம் பார்க்கும் போது, அவருக்கு பின்னணியில் பாஜக இருக்குமோ? என சந்தேகம் எழுவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments