நடிகர் தனுஷ்க்கு எச்சரிக்கை நோட்டீஸ்..சிறை தண்டனைக்கு வாய்ப்பு

Report Print Basu in பொழுதுபோக்கு
262Shares
262Shares
lankasrimarket.com

திரைப்படங்களில் புகைபிடிப்பதை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதாக நடிகர் தனுஷ்க்கு புகையிலை கட்டுப்பாட்டு மையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புகையிலை கட்டுப்பட்டு மையத்தின் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் புகைபிடிக்கும் காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருவதாக நடிகர் தனுஷ் மீது புகார் கூறப்பட்டது.

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை ஊக்கப்படுத்தும் கதாநாயகர்களுக்கு புகையிலை கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நோட்டீஸ்க்கு உரிய விளக்கம் அளிக்காமல், எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தால் சம்பந்தபட்ட நடிகருக்கு 5 வருடம் சிறையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் மீது வேலையில்லா பட்டதாரி படத்தில் அதிக இடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் 2 வது பாகத்திலும் அது போன்று தனுஷ் நடித்துள்ளதால் அவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலுவையில் உள்ள வழக்கில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகளில் தொடர்ந்து நடித்து புகைபழக்கத்தை ஊக்கப்படுத்தியது உறுதிபடுத்தப்பட்டால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்