பிக்பாஸ் ஜுலி: பேஸ்புக்கில் போட்ட பதிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது அனைவரிடத்திலும் பெரும்பாலாக பேசப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர். அவர் குறித்து பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகின.

இதையடுத்து நடிகை ஓவியாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் ஓவியா மன உளைச்சல் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

அதன் பின் ஜூலி எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில்,வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், நிகழ்ச்சியில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல என பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் அவர், பிக் பாஸில் காட்டப்பட்டது தன் உண்மையான முகம் இல்லை என கூறவருவது போல் தெரிகிறது. இருப்பினும் இந்த பதிவேற்றத்தை அவர் போஸ்ட் செய்த சில நிமிடங்களில் நீக்கிவிட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்