பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான மல்லிகா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடத்தில் பிரபலமாக வலம் வந்தவர் மல்லிகா (39)

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்றவர்களுடன் சில திரைப்படங்களிலும் மல்லிகா நடித்துள்ளார்.

ரசிகர்கள் அவரை டிரிங் டிரிங் மல்லிகா எனவும் அழைப்பார்கள்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மல்லிகா பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இரு வாரங்களாக அவர் கோமாவில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மல்லிகா நேற்று உயிரிழந்தார்.

மல்லிகாவின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்