பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய உண்மைகள்: இயக்குநர் மதுமிதாவின் பேட்டி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Seylon Bank Promotion

மக்களின் அதிக வரவேற்பை பெற்றபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 முடிந்துவிட்டநிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள்பயன்படுத்திய வார்த்தைகள், மேலும் பிக்பாஸ் ஒரு Scripted நிகழ்ச்சி, வியாபாரத்திற்காக மனிதர்களின்மனநிலையை சோதனை செய்யும் ஒரு நிகழ்ச்சி என்ற குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மதுமிதா அளித்துள்ள பேட்டியில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள், அவர்களதுவீட்டிற்குள் எப்படி இருப்பார்களோ, அதனைத்தான் நாங்கள் மக்களுக்கு ஒளிபரப்பினோம்.

போட்டியாளர்கள் பேசிய ஒரு சிலகெட்ட வார்த்தைகளை மட்டுமே ஒளிபரப்பினோம், அதனையும் நாங்கள் எடிட் செய்திருந்தால்,அது அந்த ஒரு போட்டியாளருக்கு மட்டும் நாங்கள்சார்பாக நடந்துகொண்டதாக கூறப்படும்.

எனவே தான், அவங்கள் எப்படி இருந்தார்களோஅதனை தான் எடிட் செய்து பார்வையாளருக்கு ஒளிபரப்பினோம்.இது ஒரு Scripted நிகழ்ச்சி என்றால், ஒரு பெரிய இயக்குநரின் மகனானசக்தி, ஓவியாவை அடித்து தனது பெயரை கெடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார்,காயத்ரி ரகுராமும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கமாட்டார்.

உள்ளே இருக்கும் போட்டியாளர்கள்எந்த அளவுக்கு மன ரீதியான பிரச்சனைகளை சந்தித்தார்களோ, அதே உணர்வு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் எங்களுக்கும் இருக்கிறது.

மேலும், ஆரவ்- ஓவியா விவகாரத்தில் மருத்துவ முத்தம் ஒளிபரப்பாததற்கு கலாசாரம் என்ற ஒன்று உண்டு, இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதற்கொண்டு பார்க்கிறார்கள் என்பதால் அதனை ஒளிபரப்பவில்லை.

வெளியில் காயத்ரி ரகுராமின் பெயர்கெட்டுவிட்டது என்றால் அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் நடந்துகொண்ட விதம்காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் வீடியோவை பார்க்க

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்