தாடி பாலாஜி முன் நித்யாவின் நண்பரை எச்சரித்த பொலிஸ்: விசாரணையில் வெளியான புதிய தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மனைவியான நித்யா, தாடி பாலாஜி மீது பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான வழக்கு நடந்து வரும் வேளையில், சமீபத்தில் தாடி பாலாஜி தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதால், அவர் பெரிதும் மனவேதனையடைந்தார்.

advertisement

அதைத் தொடர்ந்து, நித்யா குறித்து பல தகவல்களைத் தெரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பாலாஜி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாலாஜி, நித்யா மற்றும் நித்யாவின் நண்பரான சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடந்துள்ளது.

இதில் சப்-இன்ஸ்பெக்டரைத் தவிர மற்றவர்கள் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின், பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடைபெற்றது.

நித்யாவின் ஆண் நண்பரிடம் விசாரணை நடந்த போது, நித்யா அவருக்கு அன்பளிப்பாக செல்போன் வாங்கிக்கொடுத்த தகவல் வெளியானதால், விசாரணை அதிகாரிகள் நித்யாவின் ஆண் நண்பரை எச்சரித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காவல்நி லையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர், நித்யாவுடன் பேசியதற்கான போன் உரையாடல் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் சப்-இன்ஸ்பெக்டர் நித்யாவைத் திட்டுவது போன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் உரையாடலில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்