விபத்தை ஏற்படுத்தியது ஏன்? பிரபல நடிகரின் பிரச்சனை இதுதான்

Report Print Mahalakshmi Mahalakshmi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தமிழில் இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராஜசேகர்.

இவரது தாயார் அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்திருந்தார். அன்றிலிருந்து இவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

advertisement

இந்த நிலையில் ஒரு நாள் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்.

ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவல் தெரிந்துகொண்டு போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் ராஜசேகர் அவர்களின் மனைவி அவர் கொஞ்சம் மன அழுத்தத்தில் உள்ளார், அதனால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

போலீசார் ராஜசேகர் மீது மனிதாபிமான அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்