ஹாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்த பாலியல் குற்றச்சாட்டு! டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

ஹாலிவுட்டில் Harvey Weinstein-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான தி வைன்ஸ்டீன் நிறுவனத்தின் தலைவர் ஆவர்.

சமீபத்தில் Harvey Weinstein பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக ரோஸ் மெக்கோவனின் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து ஏஞ்சலினா ஜோலி, க்வெனித் பேல்ட்ரோ உள்ளிட்ட நடிகைகளும் Harvey Weinstein-ஆனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டனர்.

இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் ரோஸ் மெக்கோவனின் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவருக்கு ஆதரவாக #WomenBoycottTwitter என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

முதலில் பெண்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆண்களும் இணைந்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்