டி.ஆர்.சர்ச்சை: மவுனம் கலைத்த தன்ஷிகா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையில் நடிகை தன்ஷிகா தனது பெயரை சொல்லாததற்காக டி.ராஜேந்தர் கடுமையாகச் சாடினார்.

தன்ஷிகா மன்னிப்பு கோரியும்கூட விடாமல் திட்டித்தீர்த்தார். இதனால், டி.ராஜேந்தர் மீது இணையத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், பாதிக்கப்பட்ட நடிகை தன்ஷிகாவோ எதுவுமே கூறவில்லை. இந்நிலையில் இதுகுறித்து முதன் முறையாக பேசிய தன்ஷிகா, அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின.

டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.

நான் தற்போது அதிகமாக தியானத்தில் ஈடுபட்டிருக்கிறேன், அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது, அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்