​12 வயதில் 85 மொழிப்பாடல்கள்: கின்னஸ் சாதனைக்காகக் காத்திருக்கும் சிறுமி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர் வெகு விரைவில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த இருக்கிறார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சுசிதா சதீஷ். பாடல் பாடுவதில் ஆர்வம்கொண்ட சுசிதா வெகு விரைவில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த இருக்கிறார்.

இதுதொடர்பில் பேசிய அவர், சில வருடங்களுக்கு முன்பாக என் தந்தையின் தோழி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.

அவர் ஒரு ஜப்பானியர். அவர் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரிடமிருந்து ஜப்பானிய மொழிப்பாடலைக் கற்றுக்கொண்டேன்.

அதுதான் எனக்குள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. அதன்பிறகே நான் 85 மொழிகளிலுள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடக் கற்றுக் கொண்டேன் என்கிறார் சுசிதா.

தற்போது 85 மொழிப்பாடல்களை ஒரே மேடையில் பாடி கின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் 12 வயது சிறுமி சுசிதாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்