பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாகுபலி திரைப்பட நடிகர் கைது

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் வெங்கட பிரசாத்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் கதாநாயகன் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கட பிரசாத்.

இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மல்டி பிளக்ஸ் திரையரங்கில் மேலாளராக இருக்கிறார். அதே திரையரங்கில் வேலை செய்யும் ஒரு பெண், வெங்கட பிரசாத் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டதாக பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது, வெங்கட பிரசாத் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

அவருடன் நெருங்கி பழகியதில் இரண்டு தடவை நான் கர்ப்பமான நிலையில் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார்.

என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் அதற்கு அவர் மறுத்ததுடன் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் வெங்கட பிரசாத்தை கைது செய்தனர்.

வெங்கட பிரசாத் பல பெண்களிடம் நெருங்கி பழகியது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்