2017ஆம் ஆண்டில் பெற்றோர் ஆன திரைப்பிரபலங்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
373Shares
373Shares
lankasrimarket.com

2017ஆம் ஆண்டில் திரைப்பிரபலங்கள் சிலர் தாய், தந்தையாகியுள்ளனர், அவர்கள் குறித்து இங்கு காண்போம்.

கஜினி, போக்கிரி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை அசின். இவர், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வரும் துல்கருக்கும், சென்னையைச் சேர்ந்த அமல் சுஃபியா என்ற பெண்ணிற்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

இந்நிலையில் கடந்த மே 5ஆம் திகதி, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, தனக்கு அழகிய இளவரசி பிறந்துள்ளதாகவும், தனது வாழ்வில் மாற்றம் வந்துவிட்டதாகவும் பேஸ்புக்கில் துல்கர் தெரிவித்திருந்தார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர், ரஜினி என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு, தனது நண்பர் நடிகர் ஆர்யாவின் நினைவாக ‘ஆர்யன்’ என்று பெயரிட்டார்.

நெடுஞ்சாலை படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் ஆரி. இவர், இலங்கையைச் சேர்ந்த நதியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, கடந்த பிப்ரவரி 5ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. தான் தந்தை எனும் முக்கிய பொறுப்பு மற்றும் பெருமையடைந்துவிட்டதாக இணையத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இவர், தன்னுடன் ‘உருமீன்’ படத்தில் நடித்த ரேஷ்மி மேனனை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி, திருப்பதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த மே 2ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. ‘முத்ரா சிம்ஹா’ என்று தனது குழந்தைக்கு பாபி சிம்ஹா பெயரிட்டிருந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்