கழிவறை கட்டிய நடிகை த்ரிஷா: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
329Shares
329Shares
lankasrimarket.com

நடிகை த்ரிஷா, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெஃப் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வட நெமிலி என்ற கிராமத்திற்கு சென்ற த்ரிஷா, அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து, கழிப்பறையின் அவசியம் குறித்தும், கழிப்பறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு மற்றும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

அதன்பின்னர், பொதுமக்கள் முன்னிலையில் கழிப்பறை ஒன்றை கட்டி காண்பித்த இவர், இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இவர், செல்லப்பிராணிகள் மீது அன்புகொண்டு, விலங்குகள் தாக்கப்படுவதற்கு அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்