திரைப்பட வாய்ப்புக்காக ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: பிரியங்கா சோப்ரா பகீர்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா “தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, தன்னை அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக சொன்னார்கள்.

அதற்கு தான் மறுத்ததாகவும், அதனால் தன்னை படங்களிலிருந்து நீக்கியது குறித்து பகிர்ந்து கொண்டவர், சினிமா துறையில் பெண்கள் மட்டுமல்லாமல்,

பல ஆண்களும் கூட பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர் என பேசியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்