ராமராஜன் பற்றி நடிகை நளினி உருக்கமான தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை நளினி, அதன்பின்னர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.

சீரியலில் ஆரம்பம் ஆன போது மோசமான மாமியாராக நடித்ததால், பலரும் வசைபாட ஆரம்பித்ததால் சீரியசான ரோல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

அவர் கூறுகையில், நான் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த போதே மோசமான மாமியாராக நடித்தேன்.

வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன் என்பதால் வீட்டில் உள்ள பிள்ளைகள் அம்மா நீங்கள் இப்படி இருக்காதீங்க, நீங்கள் நெகடீவ் ரோல் பண்ண வேண்டாம் என்று கூறினர்.

அதன்பின் குறைத்துக் கொண்டேன், என்னுடைய பிள்ளைகள் தான் எனக்கு எல்லாம், தனியாக குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

தற்போது அவர்கள் பெரியவர்களாக மாறி தனித் தனியாக குடும்பம் நடத்தும் போது பார்ப்பதற்கே அழகாக உள்ளது.

இருந்த போதிலும் அவர்களை நான் முதல் முறை பிரிந்த போது எனக்கு அழுகை வந்துவிட்டது.

மிகவும் கஷ்டமாக இருந்தது, இப்போ அவர்கள் என்னை பார்த்து விட்டு கிளம்பும் போது அழுதுகிட்டு செல்கின்றனர், வாழ்க்கை என்றால் அப்படித் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் முன்னாள் கணவரும் நடிகருமான ராமராஜனைப் பற்றி கூறுகையில், நானும் அவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம், சில தினங்களுக்கு முன்னர் என் பேரனுக்கு கிடா வெட்டி மொட்டை போட்டார்கள்.

நான் படப்பிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்ததால், என்னால் போக முடியவில்லை, அந்த இடத்திற்கு ராமராஜன் சென்று அனைத்தையும் நல்ல படியாக செய்து முடித்தார்.

என் பசங்க என் மேலே எவ்வளவு அன்பா இருக்கிறாங்களோ, அப்படித்தான் அவரிடமும் இருக்காங்க என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்