எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி

Report Print Harishan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல கர்நாடக இசைப்பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் மறைவிற்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடியதன் மூலம் பத்ம பூசண், பாரத ரத்னா உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை வாங்கி குவித்தவர் மறைந்த எம்.எஸ் சுப்புலட்சுமி.

இரண்டாம் தாரமாக சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் முதல் மனைவிக்கு பிறந்த ராதா, சுப்புலட்சுமியிடமே வளர்ந்துள்ளார்.

சுப்புலட்சுமியைப் போன்றே ராதாவும் கர்நாடக இசை மற்றும் வீனை வாசிப்பதில் சிறந்து விளங்கினார்.

84 வயதான ராதா, வயது முதர்வின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாத நிலையில், அவரது மகன்கள் அவரை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமான ராதாவின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்