கோல்டன் குளோப்ஸ் விழாவிற்காக பிரபல நடிகை எடுத்த முடிவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

உலகப் புகழ்பெற்ற விருது விழாவான ‘கோல்டன் குளோப்ஸ்’-யில், கறுப்பு நிற உடையணிந்து கலந்துகொள்ள இருப்பதாக ஹாலிவுட்டின் பிரபல நடிகை சாவுர்ஸ் ரோனன் அதிர்ச்சியளித்துள்ளார்.

ஆஸ்கருக்கு அடித்தபடியாக உள்ள விருது வழங்கும் விழாவான ‘கோல்டன் குளோப்ஸ்’, நாளை அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாகாணத்தில் 75வது ஆண்டாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான சாவுர்ஸ் ரோனன், இந்த விழாவில் தன்னுடன் சேர்த்து பல நடிகைகள், திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, கறுப்பு நிற உடையணிந்து வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பல நடிகைகள், தாங்களும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளோம் என்று கூறியது, அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்