நட்சத்திர கலைவிழாவில் நடிகர்கள் அவமதிக்கப்பட்டார்களா? சர்ச்சையை கிளப்பிய எஸ்.வி.சேகர் ட்வீட்!

Report Print Harishan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

நட்சத்திர கலைவிழாவில் நடிகர்கள் அவமதிக்கப்பட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோலிவுட் நட்சத்திரங்கள் கூடும் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் கடந்த 6-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்விற்காக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகை ராதிகாவும் தமக்கு அழைப்பில்லை என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

கோலிவிட் கலைவிழாவில் முக்கிய நடிகர்கள் சலர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளது சினிமா உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயாகாந்த் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்த போது இந்த கலைவிழாவை மிக சிறப்பாக நடத்திக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்