தனது காதலியின் பெயரை மேடையில் கூற மறுத்த ரஜினி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

தமிழ் சினிமா நட்சத்திரத்திரங்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கலைவிழா மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.

இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் நடிகை லதா ரஜினியிடம் சில கேள்விகளை மேடையில் இருக்கும்போது கேட்டார், அதில் ரஜினியின் முதல் காதல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினி, ஆமா எனக்கு முதல் காதல் அனுபவம் இருக்கு, நான் எனது பள்ளிப்பருவத்திலே ஒரு பெண்ணை காதலித்தேன் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

உங்களது முதல் காதலியின் பெயரை தெரிந்துகொள்ளலாமா என லதா கேள்வி எழுப்பியதற்கு, காதலியின் பெயரை கூறுவதற்கு ரஜினி அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்