இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

திருமண தகவல் இணையதளம் மூலம், பல ஆண்களை ஏமாற்றியதாக, இளம் நடிகை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த நடிகையின் குடும்பத்தினர், பங்கு முதலீட்டு மோசடியில் ஈடுபட்டு லட்சங்களை சுருட்டி கைதானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரசன்ன வெங்கடேஷ், சித்ரா தம்பதியரின் மகள் நடிகை ஸ்ருதி படேல். ஆடி போனா ஆவணி, சோழவம்சம் போன்ற படங்களில் நாயகியாக நடித்து வரும் ஸ்ருதி படேல், பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் காசு பணம் துட்டு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார்.

இந்நிலையில் திருமண தகவல் இணையதளம் மூலம், பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறி ஸ்ருதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து நடிகை ஸ்ருதி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

12-ஆம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை ஸ்ருதி, தான் மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் முடித்து விட்டு மென் பொறியாளராக பணி புரிவதாக ஏமாற்றி காதல் வலை வீசி உள்ளார்.

தந்தை துபாயில் இருப்பதகவும், தனது தாய் ஸ்ருதி குரூப் ஆப் கம்பெனிஸ் மூலம் பல தொழில்கள் செய்து வருவதாகவும் ஏமாற்றி உள்ளார்.

திருமணம் செய்யப்போகிற பெண் தானே என்ற நம்பிக்கையில் அவர்களும் ஸ்ருதி பட்டேலுடன் கோவா, பெங்களூர் என சுற்றியதால், லட்சக்கணக்கில் பணத்தையும் பறிகொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடிகையின் குடும்பத்தினர் கடந்த 2011-ஆம் ஆண்டு பங்கு முதலீட்டு மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவிக்கையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிரசன்ன வெங்கட், தாய் சித்ரா, தங்கை ஹேமா ஆகியோர் சேர்ந்து கிரிஸ்டல் போரெக்ஸ் என்ற பங்கு முதலீட்டு நிறுவனம் தொடங்கி அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி ஏராளமானோரிடம் லட்சகணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போதே பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் தங்கள் இருப்பிடத்தை பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றி தனது மகள் ஸ்ருதி படேலை வைத்து திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதை அவர்கள் 2014-ஆம் ஆண்டிலிருந்து துவங்கியுள்ளனர் என்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்