குழந்தை பிறந்துவிடும்: ஓவியாவுடன் திருமண வதந்தி பற்றி சிம்பு ருசிகரம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

பிரபல தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பாக அழகிய ஓவியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் ஓவியா கலந்து கொண்டு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது போன் செய்த சிம்பு, விடிவி கணேஷ் மாற்றி குரல் மாற்றி பேசி ஏமாற்ற நினைத்தார்.

ஓவியாவுக்கு சந்தேகம் வர தான் சிம்பு என்பதை ஒப்புக்கொண்டதுடன் பல விடயங்களை பகிர்ந்தார்.

சிம்புவை பற்றி பலரும் தவறாக நினைப்பதாகவும், அவர் வேற லெவல் என பேசிய ஓவியா, நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை என புகழ்ந்து தள்ளினார்.

பதிலுக்கு சிம்புவும் ஓவியாவை புகழ, இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதே என தொகுப்பாளினி பிரியங்கா கேட்க, ஆம் என பதிலளித்தார்.

ஏற்கனவே 10 பேருடன் திருமணம் முடிந்துவிட்டது, இப்போது ஓவியாவுடன் என பேசினார்.

இருவரும் சேர்ந்து நடிப்பது பற்றி பேசிய போது, பாட்டு பாடியதற்கே திருமணம் என்றனர், சேர்ந்து நடித்தால் குழந்தை எல்லாம் பிறந்துவிடும் என கூற அரங்கமே சிரிப்பால் நிறைந்தது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்