ஒரு கண் அசைவால் லட்சக்கணக்கான இதயங்களை வென்ற ப்ரியா!

Report Print Kabilan in பொழுதுபோக்கு
158Shares
158Shares
lankasrimarket.com

சமீப காலமாக கேரள படங்கள், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் ப்ரேமம் படத்தில் இடம்பெற்ற ‘மலரே’ பாடல், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, ‘மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

’ஒரு அடாரு லவ்’ என்னும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல், காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 9ஆம் திகதி வெளியானது.

இந்த பாடலில், ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனைப் பார்த்து மாணவி ஒருவர் இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கிறார்.

இவரின் இந்த செய்கை இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததைத் தொடர்ந்து, இந்த பாடலும் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. 3 நாட்களில் ப்ரியா வாரியரை 17 ஆயிரம் பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்