நடிகையின் சர்ச்சை படம்: வருத்தபட ஒன்றுமில்லை என்கிறார்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கில்ஜோசப் ( 27). இவர் மொடலிங் அழகி, விமானபணிப்பெண், மலையாள நடிகை என பன்முகத்திறமை கொண்டவராவார்.

கேரளாவில் இருந்து வெளிவரும் கிரஹகலஷ்மி என்ற வார பத்திரிகையில் அவரது புகைப்படம் கவர் ஸ்டோரியாக வந்ததோடு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் படி போஸ் கொடுத்தவாறு உள்ள படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போஸ் கொடுத்ததற்காக நடிகை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து கில்ஜோசப் கூறுகையில், படம் வெளியானது குறித்து எனக்கு வருத்தமில்லை. எனக்கு சரியென தோன்றியதை செய்தேன்.இதில் வருத்தபட வேண்டியது ஒன்றுமில்லை என்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்