டிரெண்டாகும் அமிதாப் பச்சனின் புதிய தோற்றம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் புதிய தோற்றம், இணையதளத்தில் பரவி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 75 வயதாகிறது. இந்நிலையில், ‘102 Not Out' என்ற புதிய திரைப்படத்தில் அவர் 102 வயது முதியவராக நடித்து வருகிறார்.

இதற்காக அமிதாப் பச்சன் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இவரின் இந்த தோற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, இணையதளத்தில் டிரெண்டாகியும் வருகிறது.

மேலும், நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன், அடையாளம் தெரியாத அளவுக்கு அமிதாப் பச்சன் மாறியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல நடிகர் ரிஷி கபூரும் நடித்து வருகிறார். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்