ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த நடிகை: வைரல் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகை ஸ்ரீதேவிக்கு திரையுலகினர் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நடிகை நிவேதா தாமஸ் சிரித்த நிலையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த ஸ்ரீதேவிக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது.

இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட நிலையில், விஜய்யுடன் ஜில்லா, சசிகுமாருடன் போராளி போன்ற படங்களில் நடித்த நிவேதா தாமஸும் கலந்து கொண்டார்.

இரங்கல் கூட்டத்தில் அவர் சிரித்த நிலையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

இது சிலரை முகம் சுழிக்க வைத்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீதேவியின் இறுதி சடங்குக்கு சிரித்தபடி வந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்