நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட, பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ஹிந்தி திரையுலகில் ’மெகா ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது, அமீர்கான், கத்ரீனா கைப் நடிக்கும் ’தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அமிதாப் பச்சனுக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தனி விமானம் மூலமாக மும்பையில் இருந்து ஜோத்பூருக்கு விரைந்து சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த அமிதாப் பச்சனின் ரசிகர்கள், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்