இந்தியாவில் அதிக வசூல் புரிந்த Avengers: 200 கோடியைத் தாண்டி சாதனை!

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

Avengers: Infinity War திரைப்படம் இந்தியாவில் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்துள்ளது.

Avengers திரைப்படத்தின் மூன்றாம் பாகமான Avengers: Infinity War சமீபத்தில் வெளியானது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியானது.

வெற்றிப்படமாக அமைந்த Avengers: Infinity War, இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ.157 கோடியும், அடுத்த வாரம் ரூ.47 கோடியும் வசூலித்தது. மூன்றாவது வார இறுதியில் இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்தது.

இதன்மூலம், இந்தியாவில் ரூ.200 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, The Jungle Book திரைப்படம் இந்தியாவில் மொத்தமாக ரூ.261 கோடி வசூலித்தாலும், வரிகள் நீங்கலாக ரூ.188 கோடி வசூலித்தது.

ஆனால், Avengers: Infinity War திரைப்படம் தற்போது வரிகள் நீங்கலாக ரூ.225 கோடியை நெருங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ரூ.200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் திரைப்படம் என்கிற பெருமையை Avengers: Infinity War பெற்றுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்