நடிகை கீர்த்தி சுரேஷ் உருவில் என் அம்மாவை பார்த்தேன்: சாவித்ரி மகள் உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த பிரகாசமும் துயரமும் நிரம்பிய படம் தான் நடிகையர் திலகம்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பாரட்டாதே ஆட்களே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி, இப்படத்தை பார்த்த போது பழைய விடயங்கள் எல்லாம் அப்படியே ஞாபகம் வந்துவிட்டது.

இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் உருவில் என் அம்மாவை பார்த்தேன். நான் மட்டுமின்றி என் தம்பியும் அவரின் நடிப்பை பார்த்து வியந்து போய், இருவரும் நேரடியாக அவரின் வீட்டிற்கு சென்று வாழ்த்தினோம்.

அம்மாவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் எல்லாம் எனக்கு தெரிந்தது தான், ஆனால் தற்போது வந்துள்ள கீர்த்தி சுரேஷை வைத்து எப்படி எடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன், ஆனால் அசத்திவிட்டார்.

பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்