காலாவுக்காக ஜப்பானில் இருந்து சென்னை வந்த தம்பதி

Report Print Trinity in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கிய காலா படம் இன்று வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ஜப்பான் தம்பதியர் இருவர் ஜப்பானில் இருந்து வருகை தந்திருக்கின்றனர்.

அவர்களை செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது தாங்கள் ரஜினிகாந்தின் மிக பெரிய விசிறிகள் என்றும் வருகிற 10ஆம் தேதிதான் காலா படம் ஜப்பானில் வெளியாகிறது என்றும் அதுவரை பொறுக்க முடியாமல் முதல் காட்சியினைக் காண தாங்கள் சென்னை வந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு முன் இதே போல எந்திரன், கோச்சடையான், கபாலி போன்ற படங்களை அவர்கள் சென்னையில் வந்து பார்த்ததாகவும் கூறியிருக்கின்றனர்.

இன்று காலை முதல் ரோகினி தியேட்டர், காசி தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர் என அடுத்தடுத்து காலா படத்தை தாங்கள் இருவரும் பார்த்து ரசிப்பதாக கூறியிருக்கின்றனர்.

‘வேங்க மவன் ஒத்தையில நிக்கேன். தில்லிருந்தா மொத்தமா வாங்கல’ எனும் காலா படத்தில் ரஜினியின் பஞ்ச் வசனத்தையும் அவர் பேசிக்காட்டினார். அதேபோல் அவரின் மனைவியோ ‘கதம் கதம்’ என பேசிக்காட்டியது அவர்கள் ரஜினியின் தீவிர விசிறிகள் என்பதை பறைசாற்றியது.

ஜப்பானில் ரஜினிக்கென்று ரசிகர்கள் இருப்பதும் அவர்களுக்காகவே ரஜினியின் படங்கள் திரையிடப்படுவதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சீனாவிலும் இவரின் ரசிகர்கள் அதிகளவில் இவரது படங்களை பார்த்து மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்