தன்னை விட 10 வயது இளையவரை காதலிக்கும் பிரபல நடிகை

Report Print Trinity in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியில் பிரபலமான படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் அமெரிக்க சீரியல் குவான்டிகோ வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான தொடரில் நடித்து கொண்டிருக்கும்போதே பே வாட்ச் படத்திலும் நடித்து பெரும்புகழ் பெற்றார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ப்ரியங்காவிற்கு அங்குள்ள ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவருடன் காதல் எனக் கூறப்படுகிறது. நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் ஆவார்.

இவர்கள் இருவரும் கைகோர்த்தபடி பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகின்றனர். பாலிவுட்டிற்கும் இந்த தகவல் பரவியது. இருப்பினும் இவ்விருவரும் இத்தகவலை மறுத்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்